39 பாலைப்பூப் பெண்

 

ஒற்றைப் பூவாய் மலர்ந்து தோட்டத்தில்

மணம் வீசி நிற்கையிலே எட்ட

நின்று வேலிக்கப்பால் கைநீட்டி பறித்தவனுக்கு

பூ சொந்தமா!

தோட்டத்தில் இருந்து மணம் பரப்பியதால்

மட்டும் தோட்டத்திற்கு உரிமையாகுமா?

தெய்வத்திற்கு அர்ப்பணம் செய்யக்

காத்திருக்கும் பூவின் யோசனையை யார்

கேட்பார்?

நல்ல விலை கொண்டு நாயை விற்பார்

அந்த நாயிடம் யாரும்

யோசனை கேட்பதில்லை……

எங்கோ பாரதியின் மௌன

அழுகை ஆரம்பம்!

 

License

Feedback/Errata

Comments are closed.