6 இந்தக் காதல் எதுவரை?

மழைக்கு மண்ணின்

மீது காதல்!

மனிதனுக்கு பணத்தின்

மீது காதல்!

செல்வனுக்குப் புகழின்

மீது காதல்!

நங்கைக்கு நாயகன்

மீது காதல்!

இன்றைய சமூகத்திற்கு

எதன்மீது காதல்?

கண்ணாடி மாளிகை

வலைப்பின்னல் காதலா!

புவனத்தை மினுக்கும்

செல்லிடப்பேசி காதலா!

மோகத்தை வரவழைக்கும்

மோகனாங்கி வலையுலக

அறியா நட்புக் காதல்

எதுவரை?

License

Feedback/Errata

Comments are closed.